கள்ளக் காதலியை கட்டிப் பிடித்து விட மறுத்த இளைஞர்… திருப்பூர் காவல் நிலையத்தில் பரபரப்பு … வலுக்கட்டாயமாக பிரித்துவிட்ட போலீஸ் !!

Published : Feb 06, 2019, 10:07 PM ISTUpdated : Feb 06, 2019, 10:12 PM IST
கள்ளக் காதலியை கட்டிப் பிடித்து விட மறுத்த இளைஞர்… திருப்பூர் காவல் நிலையத்தில் பரபரப்பு … வலுக்கட்டாயமாக  பிரித்துவிட்ட போலீஸ் !!

சுருக்கம்

தனது மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ள நிலையில் வட மாநில இளைஞர் ஒருவர் போலீஸ் நிலையத்தில் தனது கள்ளக் காதலியை கட்டிப் பிடித்துக் கொண்டு விட மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக பிரித்து விட்டனர்.

பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபருக்கு திருணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் திருப்பூர் வஞ்சிபாளையம் ராஜ் நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு அந்த வாலிபர் தனது சொந்த ஊரான பீகாருக்கு சென்றார். இதற்கிடையில் அந்த வாலிபரின் மனைவி 3–வது முறையாக கர்ப்பமானதால், மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூரில் விட்டு விட்டு அவர் மட்டும் பீகார் சென்றார்.
 
அங்கு 10 நாட்கள் மட்டுமே தங்கிய வாலிபர் அங்குள்ள 17 வயது இளம் பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் அவர்களுக்குள், நீயில்லாமல் நானில்லை, நானில்லாமல் நீயில்லை என்றானது. இதையடுத்து அந்த வாலிபர் பீகாரில் இருந்து கள்ளக்காதலியை திருப்பூர் அழைத்து வந்து, தனது நண்பர் தங்கும் விடுதியில் தங்க வைத்து கவனித்து வந்ததாகத்தெரிகிறது.

இதற்கிடையில் அந்த பெண்ணை காணாத பெற்றோர், அந்த பெண் திருப்பூரில் தங்கி இருப்பது தெரிந்து திருப்பூர் வந்துள்ளனர். பின்னர் அந்த பெண் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று பெண்ணை அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். 

ஆனால் அந்த வாலிபர், தான் அழைத்து வந்த பெண்ணை அனுப்ப முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் வீரபாண்டி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபருக்கு, ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தற்போது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

அப்போது அந்த வாலிபர், போலீஸ் நிலையத்தில் கள்ளக்காதலியை காற்று புக முடியாத அளவுக்கு இறுக்கமாக அணைத்து கட்டிப்பிடித்துக் கொண்டார். அவரிடமிருந்து அந்த பெண்ணை மீட்க பெற்றோர் மற்றும் போலீசார் முயற்சி செய்தும் முடியவில்லை. 

சுமார் 30 நிமிடம் விடாகண்ணாகவும், கொடாகண்ணாகவும் நடந்த விளையாட்டில் ஒரு வழியாக போலீசார் வலுக்கட்டாயமாக இருவரையும் பிரித்தனர். அதன்பிறகு அந்த இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி சொந்த ஊரான பீகாருக்கு பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். வாலிபரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்