தேனி அருகே வக்கீல் ஒருவர் கூலிப்படையினரால் சரமாரி வெட்டி கொலை... பதட்டத்தில் தேனி...!!

Published : Mar 06, 2020, 10:37 PM IST
தேனி அருகே  வக்கீல் ஒருவர் கூலிப்படையினரால் சரமாரி வெட்டி கொலை... பதட்டத்தில் தேனி...!!

சுருக்கம்

தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வக்கீலை கூலிப்படை சரமாரி வெட்டி கொலை செய்து விட்டு கேரளவிற்கு தப்பி ஓட்டியதாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

T.Balamurukan

தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வக்கீலை கூலிப்படை சரமாரி வெட்டி கொலை செய்து விட்டு கேரளவிற்கு தப்பி ஓட்டியதாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர்  ரஞ்சித். இவர் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் இருந்து, குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ரஞ்சித்தை பின்தொடர்ந்து காரில் சென்ற 4 பேர் கொண்ட கூலிப்படையினர், அனுமந்தன்பட்டியில் இரு டூவீலரை வழிமறித்து ரஞ்சித்தை அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டு காரில் தப்பிச் சென்று விட்டனர்.

இதில் படுகாயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உத்தமபாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.  பட்டப் பகலில் நடந்த இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொலை குறித்து போலீசாரிடம் பேசும் போது..," ரஞ்சித்க்கும் அவரது உறவினருக்கும் உள்ளாட்சி தேர்தல் பகை இருந்து வருகிறது.ரஞ்சித் சித்தப்பா மகன் தான் குள்ளப்பன் கவுண்டன்பட்டிக்கு பஞ்சாயத்து தலைவர்.கடந்த 10 வருடங்களாகவே ரஞ்சித் குடும்பத்திற்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் மோதல் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் கூட ரஞ்சித் எதிர் தரப்பினர் ஒருவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கியதாக சொல்லப்படுகிறது. ஆக இந்த கொலை பழிக்கு பழியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது என்கிறார் அவர்.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!