செல்வியின் முதல் கணவர் குழந்தையா ஸ்ரீமதி.! விஷமம் பரப்பும் யூடியூப்.. டிஜிபி அலுவலகத்தில் கதறிய மாணவியின் தாய்

By Ezhilarasan BabuFirst Published Sep 5, 2022, 7:13 PM IST
Highlights

பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக யூடியூப் சேனல் ஒன்று செயல்படுவதாகவும் அதில் தன்னை குறித்தும் தனது மகள் குறித்தும் அவதூறு பரப்பி வருவதாகவும் கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் செல்வி டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக யூடியூப் சேனல் ஒன்று செயல்படுவதாகவும் அதில் தன்னை குறித்தும் தனது மகள் குறித்தும் அவதூறு பரப்பி வருவதாகவும் கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் செல்வி டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே மகளை இழந்து துயரத்தில் தவிக்கும் தங்களை திட்டமிட்டே அந்த குறிப்பிட்ட  யூடியூப் சேனல் காயப் படுத்துவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் காவல்துறை இயக்குனரை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், எனது மகளைப் பற்றியும் என்னைப் பற்றியும்  சமூக வலைதளத்தில் சில தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். கார்த்திக் பிள்ளை என்ற நபர் நடத்திவரும் யூடியூப் சேனலில் பள்ளிக்கு சாதகமாக  உண்மைகளை மறைக்க பல வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார்,

இதையும் படியுங்கள்: போலீஸ் கோபாலபுரத்தில் மாவாட்டுகிறதா? எல்லை மீறிய சி.வி சண்முகம்.. லுங்கியுடன் கைதாவாய்.. எச்சரித்த புகழேந்தி.

யூட்யூப் சேனல் என்றால் அது உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும், ஆனால் இந்த நபர் பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார், நானும் இவ்வளவு நாள் பொறுத்துக்கொண்டேன், ஆனால் இப்போது எனது வாழ்க்கையைப் பற்றி அவர் தவறான தகவல்களை கூறி வருகிறார். என்னைப் பற்றிய அபாண்டமான தவறுதலான பொய்களை கூறி வருகிறார், அதாவது மாணவியின் உண்மையான தந்தை யார்.?  G-என அவர் பதிவிட்டு வருகிறார். ஸ்ரீமதியில் தந்தையின் பெயர் கணேசன் என்றும், அந்த கணேசனை நான் கொலை செய்திருக்கலாம், விவாகரத்து செய்திருக்கலாம் அல்லது வேறு ஏதாவது செய்திருக்கலாம் என்று அந்த நபர் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்: சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பினால் கணக்கு முடக்கப்படும்... குழு அமைத்தது காவல்துறை!!

ஸ்ரீமதியின் இனிசியல் ஜி என்றுதான் எட்டாம் வகுப்பு வரை இருந்தது, பத்தாம் வகுப்பில் தான் நான் ஸ்ரீமதியின் இனிசியலை R- என்று மாற்றினேன், அப்போதுதான் ராமலிங்கத்தையும் நான் திருமணம் செய்து கொண்டேன் என அந்த யூடியூப்பர் கூறிவருகிறார், அந்த நபர் என்னை தகாத முறையில் இழிவாகப் பேசுகிறார், ஏற்கனவே மகள் இறந்த துக்கத்தில் இருந்து வருகோறோம், இந்த நிலையில் இப்படிப் பேசுவதை பார்த்தவுடன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், உடனே டிஜிபி அலுவலகத்தில் அந்த யூடியூப் சேனலை முடக்க வேண்டும், அந்த யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளேன்.

பள்ளி நிர்வாகம் இவரைப் போன்றவர்களுக்கு பணம் கொடுத்து எங்களுக்கு எதிராக பேச வைக்கிறார்கள், இறந்து போன என் மகள் குறித்து மிகவும் அவதூறாக பேசி வருகிறார், என்னைப்பற்றிய இழிவாக பேசுகிறார், எத்தனை ஆதாரத்தை கொடுத்தும் இப்படி அவதூறு பரப்புகிறார்கள், எனவே அந்த நபரின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும், அந்த நபரை கைது செய்ய வேண்டும் என டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ளேன், இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!