பந்தயம் கட்டி பெண்ணை முத்தமிட்ட போதை இளைஞர் !! செமையா கவனித்த போலீஸ் !!

Published : Sep 24, 2019, 08:00 AM IST
பந்தயம் கட்டி பெண்ணை முத்தமிட்ட போதை இளைஞர் !! செமையா கவனித்த போலீஸ் !!

சுருக்கம்

புதுச்சேரியில் நண்பனிடம் பந்தயம் கட்டி நடந்து சென்ற பெண் அதிகாரியை கட்டிப் பிடித்து முத்தமிட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் லாவண்யா. மும்பையை சேர்ந்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வர்த்தக மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர்  டியூட்டி முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது லாவண்யாவின் பின்னால் 2 இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர். அதை அந்த பெண் கவனிக்கவில்லை.

வீட்டுக்கு பக்கத்தில் அந்த பெண் வந்த போது, பைக்கை தெருமுனையிலேயே நிறுத்திவிட்டு அதில் இருந்து ஒரு இளைஞர்  இறங்கி ஓடிச்சென்று திடீரென லாவண்யாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டு ஓடிவிட்டார். 

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த பெண், கூச்சலிட்டார். ஆனால் அந்த நேரத்தில் தெருவில் யாருமே இல்லாததால் பைக்கில் வந்த 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து  அந்த பெண் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் ஆளுநர் கிரண்பேடிக்கு வாட்ஸ்அப் மூலம் புகாரை அனுப்பினார்.

அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்  கிரண்பேடி, உடனடியாக போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவிக்களை ஆய்வு செய்தனர்.

அதில் முத்தம் கொடுத்துவிட்ட தப்பி ஓடியவர் மொட்டத்தோப்பு  பகுதியைச் சேர்ந்த ரிஷி என்பவர் என தெரியவந்தது. இதையடுத்து ரிஷியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது நானும் என் ஃபிரண்டும், தண்ணி அடிச்சிட்டு பைக்கில் வந்துட்டு இருந்தோம். அப்போதான் அந்த பெண்ணை பார்த்தோம். என் நண்பன் என்னிடம், அந்த பெண்ணைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க முடியுமா?' என்று பந்தயம் கட்டினார். 

நானும், 'முத்தம் கொடுத்து, சவாலில் ஜெயித்து காட்டுகிறேன்' என்று சொல்லி, அதன்படியே செய்தேன்" என்றார். ரிஷியை கைது செய்து சிறையிலடைத்த போலீசார் உடன் வந்த நண்பரை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சார், எமர்ஜென்சி... கடிதம் எழுதி வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட முன்னாள் போலீஸ் ஐஜி..! பகீர் பின்னணி..!
அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!