9 ஆம் வகுப்பு மாணவியை கும்பலாக கற்பழித்த 4 மாணவர்கள் ! போட்டோ எடுத்து மிரட்டல் !!

Published : Oct 12, 2019, 09:58 AM IST
9 ஆம் வகுப்பு மாணவியை கும்பலாக கற்பழித்த 4 மாணவர்கள் ! போட்டோ எடுத்து மிரட்டல் !!

சுருக்கம்

மானாமதுரை அருகே 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த மாணவியுடன் விஷ்வா தனது செல்போனில் நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை விஷ்வா தனது நண்பர்களான கவியரசன், அருண்பாண்டி, மற்றும் ஆகாஷ்  ஆகிய 3 பேரின் செல்போனிற்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து இந்த படங்களை கவியரசன், அருண்பாண்டி, ஆகாஷ் ஆகிய 3 பேரும் அந்த மாணவியிடம் காண்பித்து அவரை கட்டாயப்படுத்தி  கற்பழித்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தாயார் மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு அருண்பாண்டி, கவியரசன் ஆகிய 2 பேரை நேற்று முன் தினம் இரவு கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட விஷ்வா மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆகாஷ், அருண்பாண்டி ஆகியோர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ரூ.2000 கொடுத்தா இளம்பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்.. போலீஸ் என்று தெரியாமல் வசமாக சிக்கிய கும்பல்
பகலிலேயே கொழுந்தியாளை படுக்கைக்கு அழைத்த அனுமந்தன்! வர மறுத்ததால் வெறியில் கொன்*றேன்! பகீர் வாக்குமூலம்!