இளவரசி வீட்டில் சுமார் 100 சவரன் கொள்ளை.. காவலாளிக்கு போலீஸ் வலை!

Published : Nov 19, 2018, 10:19 AM IST
இளவரசி வீட்டில் சுமார் 100 சவரன் கொள்ளை.. காவலாளிக்கு போலீஸ் வலை!

சுருக்கம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சசிகலா உறவினர் இளவரசி வீட்டில் 95 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவின் அன்னான் மனைவி இளவரசி, சசிகலா மற்றும் சுதாகரன் ஆகியோர் உள்ளனர். இளவரசியின் வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில்  உள்ளது. 

இந்நிலையில், இந்த வீட்டில் தற்போது யாரும் இல்லாத நிலையில் வீட்டில் டூப்ளிகேட் சாவி போட்டு திறந்து சுமார் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொள்ளையில் இளவரசியின் வீட்டு காவலாளியான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோனாக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள காவலாளி கோனாக்கை போலீஸார் தேடி வருகின்றனர். 

இதேபோல மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி மர்மமான முறையில் கொல்லப்பட்டதாகவும் அங்கு சில பொருட்கள், ஆவணங்கள் காணாமல் போனதாகவும் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது சசிகலா உறவினர் வீட்டிலும் கொள்ளை நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!