பெண் போலீசை மிரட்டி கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர்… வழக்கு பதிவு… தப்பி ஓட்டம்…

Published : Nov 19, 2018, 08:32 AM ISTUpdated : Nov 19, 2018, 09:19 AM IST
பெண் போலீசை மிரட்டி கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர்… வழக்கு பதிவு… தப்பி ஓட்டம்…

சுருக்கம்

நவி மும்பையில் பெண் போலீசை மிரட்டி தொடர்ந்து கற்பழித்து வந்த சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

நவிமும்பை பேலாப்பூர் சி.பி.டி. போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் அமித் செலார். இவர்  தே ஸ்டேஷனில் பணி புரியும் பெண் போலீஸ்  ஷர்மிளாவை அங்கேயே கற்பழித்துள்ளார்.

மேலும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் பெண் போலீசை ஆபாசமாகவும் படம் பிடித்து உள்ளார். அந்த வீடியோ காட்சியை வெளியிட்டு விடுவதாக மிரட்டி தொடர்ந்து அவரை கற்பழித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கடுப்பான அந்த பெண் போலீஸ் இது குறித்து தனது கணவரிட்ம் தெரிவித்துள்ளார். இதையடுத்து  கணவன் , மனைவி இருவரும் நவிமும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமாரை சந்தித்து சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்தனர்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர், பெண் போலீஸ் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சி.பி.டி. நிலைய போலீசுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அமித் செலார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுக்குறித்து விசாரணை நடத்த, போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது, அவர் பெண் போலீஸ் புகாரின் பேரில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்து தலைமறைவானது தெரியவந்தது. போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!