உடலுறவுக்கு அழைத்த கணவன் அடித்து கொலை; மனைவி, மகன் வெறிச்செயல்

Published : Aug 17, 2023, 05:53 PM ISTUpdated : Jul 19, 2024, 11:48 PM IST
உடலுறவுக்கு அழைத்த கணவன் அடித்து கொலை; மனைவி, மகன் வெறிச்செயல்

சுருக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உடலுறவுக்கு அழைத்த கணவனை மனைவியும், மகனும் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், சு. பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் குரும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால்(வயது 42). இவர் பெங்களூருவில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சிவகாமி(34) என்ற மனைவியும், உமேஷ்(20) என்ற மகனும், சுகன்யா(19) என்ற மகளும் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு ஜெயபால் பெங்களூருவில் இருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். வந்தவர் மனைவியை உடலுறவிற்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்க தடை

வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவியை நீ வேறொருவருடன் தொடர்பு வைத்துள்ளாய் என கூறி அடித்துள்ளார். இதை பார்த்த அவரது மகன் உமேஷ் தனது தந்தையை தலையின் பின்பக்கம் அடித்ததில் மயங்கி கீழே விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உமேசை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!