அதிர்ச்சி.. ! ஜெம்ஸ் என்று நினைத்து பட்டன் பேட்டரியை விழுங்கிய குழந்தை.. அப்பறம் என்னாச்சு..?

By Thanalakshmi VFirst Published Apr 29, 2022, 12:22 PM IST
Highlights

சென்னையில் ஜெம்ஸ் மிட்டாய் என்று நினைத்து பொம்மையிலுள்ள உள்ள பட்டன் பேட்டரியை 4 வயது குழுந்தை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னையில் ஜெம்ஸ் மிட்டாய் என்று நினைத்து பொம்மையிலுள்ள உள்ள பட்டன் பேட்டரியை 4 வயது குழுந்தை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் வடக்கு மாட வீதி தெருவை சேர்ந்தவர்  கணேஷ் .இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 வயதில் தனஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. தனஸ்ரீ தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனஸ்ரீ வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்திருக்கிறார்.  அப்போது பொம்மை ஒன்றிலிருந்து விழுந்த சிறிய அளவிலான பட்டன் வடிவிலான பேட்டரியை எடுத்து ஜெம்ஸ் மிட்டாய் என்று நினைத்து விழுங்கியுள்ளார்.

சிறிது நேரத்தில், குழந்தை தனஸ்ரீ பயங்கரமாக அழுதுள்ளார். பதறி அடித்து ஓடி வந்து பெற்றோர் பார்த்த போது தான், பேட்டரி குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டுள்ளது. வலி தாங்க முடியாமல் குழந்தை அழுவது தெரிந்துள்ளது.இதனையடுத்து பெற்றோர் அவசர அவசரமாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 

அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், பேட்டரி உணவு குடல் பகுதியில் இருப்பது தெரிந்தது. குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் அதனை வெளியில் எடுத்துவிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக குழந்தை தாயார் கூறினார். விளையாடும் குழந்தைகளுக்கு எளிதில் விழுங்க கூடிய சிறிய அளவிலான பொருட்களை கொடுக்கக் கூடாது என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் பொம்மைகளுடன் குழந்தை விளையாடும் போதும் கூட பெற்றோர்கள் தங்கள் குழந்தை மேல் ஒரு கண் வைத்திருப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தினர். மேலும் இது போன்று பேட்டரி விழுங்கிய மற்றொரு குழந்தையும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்

click me!