இறந்த மகனின் உடலில் 4 மணி நேரம் ரத்த கசிவு.. மருத்துவமனையில் உடல் உறுப்புகள் திருடப்பட்டதா..? கதறும் பெற்றோர்

By Ezhilarasan BabuFirst Published May 20, 2022, 5:26 PM IST
Highlights

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இறந்த மகனின் உடலில் இருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆறு மாதங்களாகியும் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளனர். 

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இறந்த மகனின் உடலில் இருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆறு மாதங்களாகியும் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளனர். சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை  பழவந்தாங்கல்  நங்கநல்லூரை சேர்ந்த தம்பதியர் விஜயகுமார் - மகாலட்சுமி இவர்களுக்கு  சசிகுமார் என்ற மகன் இருந்தார், (38) சிறுநீரக குழாயில் அடைப்பு இருப்பதாக கூறி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீர் குழாயில் சதை வளர்ந்து இருப்பதாகவும் அதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர் இதனால் கடந்த  ஆண்டு அக்டோபர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 நாட்களில் அவருக்கு  சிறுநீரகம் செயலிழந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர். 6 நாட்களில் 3 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் அவர்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில்  அவருக்கு நான்காவது முறையாக டயலிசிஸ் செய்ய ஊசி போட்ட போது அவர் இறந்ததாக மருத்துவர் கூறினர், இதைக்கேட்ட பெற்றோர்கள் கதறி அழுதனர். இந்நிலையில் உடற்கூறு ஆய்வு செய்யாமலேயே பிரேதத்தை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு சென்று நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ரத்த கசிவு இருந்தது, அதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் தனது மகனின் உடலில் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக சந்தேகத்தில் பேரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

ஆனால் இதுவரை அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சென்னை மாநகர காவல் ஆணையர், மருத்துவத் துறை செயலாளர், மருத்துவ அமைச்சர், முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை ஆறு மாதங்கள் ஆகியும் அதில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால்  அவரது பெற்றோர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசி இந்த பிரச்சினையில் உடனே தலையிட்டு தன் மகனுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். 
 

click me!