பிரபல மலையாள நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம் !

Published : May 20, 2022, 04:14 PM IST
பிரபல மலையாள நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம் !

சுருக்கம்

நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக ஷெரின் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிளாட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ வின் உடல் கண்டறியப்பட்டது. நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ வின் உடல் கொச்சி பாலாரிவட்டத்தில் உள்ள அவரது பிளாட்டில் இருந்து தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கொச்சி போலீசார் அவருடைய நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக ஷெரின் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார் என்பதும் தனது இணையதள கணக்குகளிலும் மனவருத்தத்துடன் பல பதிவுகள் போட்டுள்ளார் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரது உடல் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனை ஆய்வும் செய்யப்பட்டது. 

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக மன வருத்தத்தில் இருந்த ஷெரின் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரால் கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து இதுகுறித்து கொச்சி பாலேரி வட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்களிடத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததில் ஷெரினுக்கு ஒரு காதலன் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் சில தகவல்களும் வெளியாகி உள்ளது.

காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஷெரினின் காதலன் தலைமறைவாகியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பாலாரிவட்டம் போலீசார் தலைமறைவு ஆகியுள்ள ஷெரினின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு.! குவாட்டர் ரூ.20..பீர் ரூ.10 குடிமகன்கள் ஷாக் !!

இதையும் படிங்க : Ration Card : உடனே இதை செய்யுங்க.. அப்படியில்லை உங்க 'ரேஷன் கார்டு' செல்லாது !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!