காவல் நிலையத்தை கதிகலங்கவைத்த போதை ஆசாமிகள்..!! தலையில் கைவைத்து அமர்ந்த போலீசார்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 26, 2020, 10:53 AM IST
Highlights

அந்த நான்கு பேரும் மருத்துவமனையிலும் ரகளையில் ஈடுபட்டதால் அவர்களை  மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்களும் மறுத்துவிட்டனர். அங்கு அவர்கள் செய்த ரகளையில் மருத்துவமனையிலும் நிலைமை மோசமானதால் போலீசார் அவர்களை உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்,

மதுபோதையில் பொதுமக்களை தாக்கியதாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நான்கு இளைஞர்கள், அங்கும் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி அருகே அமைந்துள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கிக்கொண்டு அருகில் இருந்த இடத்தில் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் இருந்த 4 இளைஞர்கள், அவ்வழியாக வருவோர் போவோரிடம் வம்பிழுத்து சண்டையிட்டனர். அதனடிப்படையில் வெப்பாலம்பட்டி சேர்ந்த பெருமாள் என்பவர் அவ்வழியாக வந்தபோது அந்த இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின் கைகலப்பாக மாறியது. இதில் காயமுற்ற பெருமாள் அக்கம்பக்கத்தினர் உதவியோடு அந்த நான்கு பேரையும் தட்டிக்கேட்க கூட்டம் கூட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக அங்கு வந்த போலீசார் அந்த நான்கு பேரையும் பிடித்து வாகனத்தில் ஏற்றியதுடன், காயமடைந்திருந்த பெருமாளையும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்க்க முற்பட்டனர்.  அப்போது போதை தலைக்கேறிய நிலையில் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த அந்த நான்கு ஆசாமிகளும், அங்கு மருத்துவர்களிடமும் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் 4 பேரும் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்குட்பட்ட கீரைபட்டி கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், சிற்றரசு, ராஜேந்திரன், அஜித் என்பது தெரியவந்தது. ஊத்தங்கரையில் மணல் லோடு இறக்கிவிட்டு அதில் கிடைத்த பணத்தில் பங்கு போட்டு குடித்துக் கொண்டிருக்கும்போது போதைதலைக்கேறிய நிலையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. 

அந்த நான்கு பேரும் மருத்துவமனையிலும் ரகளையில் ஈடுபட்டதால் அவர்களை  மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்களும் மறுத்துவிட்டனர். அங்கு அவர்கள் செய்த ரகளையில் மருத்துவமனையிலும் நிலைமை மோசமானதால் போலீசார் அவர்களை உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், அங்கும் அவர்கள் காவல் நிலையம் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஊத்தங்கரை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பணியிடம் இன்னும் நிரப்பப்படாமல்  காலியாக இருப்பதால், அங்கிருந்த போலீசார் இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.  ஒரு கட்டத்தில் காவல் துறையாலேயே தங்களை ஒன்றும் செய்யமுடியாது என அவர்கள் வீரவசனம் பேசினர், இதில் கடுப்பான போலீசார் அந்த நான்கு பேர் மீதும்,  குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக  வழக்குப் பதிவு செய்ததுடன், அவர்கள் ஓட்டி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு போதை தெளிந்த பின்னர் போலீசார் அந்த அசாமிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்தனர்.  

click me!