ஷேர்சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் இளம்பெண்களை தொடர்பு கொண்டு காதல் வலை வீசியுள்ளார். இவரது மாயாஜால வார்த்தைகளால் மயக்கி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இளம்பெண்களை காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்து விட்டு அதை வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோதட்டூரைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார் (23). சிறு வயதில் இருந்தே போதை பழக்கத்திற்கு அடிமையானதையடுத்து கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இவர் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடப்பா, விஜயவாடா மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் இவர், ஷேர்சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் இளம்பெண்களை தொடர்பு கொண்டு காதல் வலை வீசியுள்ளார். இவரது மாயாஜால வார்த்தைகளால் மயக்கி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அந்த பெண்களுக்கு தெரியாமலேயே நிர்வாண புகைப்படங்கள், வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இதுதவிர சில பெண்களிடம் நகைகளை பறித்துக்கொண்டும் ஏமாற்றியுள்ளார். ஆனால் இதுதொடர்பாக வெளியில் தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.
எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த சில பெண்கள் காவல் நிலையத்தில் தெரியமாக புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பிரசன்னகுமாரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதனிடையே, சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு இளைஞரை கைது செய்த போது அவர்தான் பெண்களை சீரழித்த பிரசன்னகுமார் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெண்களை ஏமாற்றி அவர்களுக்கு தெரியாமல் நிர்வாண வீடியோ எடுத்து ‘பிளாக்மெயில்’ செய்து பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறித்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.