Crime News: 15 ஆண்டில் 300 பேருக்கு விஷ ஊசி போட்டு கருணை கொலை? பகீர் வீடியோ வைரல்..!

Published : Apr 21, 2023, 03:51 PM IST
Crime News: 15 ஆண்டில் 300 பேருக்கு விஷ ஊசி போட்டு கருணை கொலை? பகீர் வீடியோ வைரல்..!

சுருக்கம்

கடந்த 15 ஆண்டில் 300 முதியவர்களை விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 15 ஆண்டில் 300 முதியவர்களை விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் தற்காலிக உதவியாளராக வேலை செய்து வருபவர்  மோகன்ராஜ் (50). இவர் வயது முதிர்ந்து படுத்த படுக்கையாய் உள்ளவர்களுக்கு பூச்சி மருந்து கொண்ட ஊசியை செலுத்தி கருணை கொலை செய்வதாகவும், இதற்காக அவர்களது உறவினர்களிடம் ரூ.5000 வரை பணம் பெறுவதாகவும், கடந்த 15 வருடமாக இது போல் 300 பேரை விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்ததாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதை அறிந்த பள்ளிபாளையம் போலீசார் மோகன்ராஜை அழைத்து விசாரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பிணவறை ஊழியர் மோகன், போலி டாக்டர் அப்பாவு மற்றும் மருத்துவமனை ஊழியர் கோவிந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!