புர்கா அணிந்த 3 பெண்கள்... ஓடும் பேருந்தில் செய்த கேவலமான வேலை!

Published : May 11, 2019, 10:17 AM IST
புர்கா அணிந்த 3 பெண்கள்... ஓடும் பேருந்தில் செய்த கேவலமான வேலை!

சுருக்கம்

சென்னை மாநகரில் ஓடும் பேருந்தில் புர்கா அணிந்து கொண்டு 3 பெண்கள், செய்த அட்டூழியம் அதிரவைத்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் சங்கிலி பறிப்பு, செயின் பறிப்பு முதலியவை சிறிது காலம் முன்பு மாநகர் முழுவதும் பரவிக்கிடந்தது. பின்னர் பொலிஸாரின் கிடுக்குப்பிடியால், இதை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த செயின் பறிப்பு நூதன திருட்டு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சென்னை மாநகரில் பர்தா அணிந்து கொண்டு 3 பெண்கள் செயின் பறித்து வரும் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதேபோன்று தாம்பரம் அருகே பேருந்து ஓடிக்கொண்டிருந்த போதே சசிகலா என்ற பயணியிடம் செயின் பறிக்க 3 பெண்கள் முயன்றுள்ளனர்.  சென்னை நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த சசிகலா என்பவர். இவர் நேற்றிரவு தாம்பரத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதூருக்கு செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள முயன்ற அந்த புர்கா அணிந்திருந்த மூன்று பெண்கள், சசிகலாவை சுற்றி நின்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென கழுத்திலிருந்த தாலி தங்க சங்கிலியை அறுத்தனர்.

வேகமாக பிடித்து இழுத்ததால் வலியால், சசிகலா துடித்து கூச்சலிட   கூச்சலிடவே, சக பயணிகள் அந்த 3 பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.  இவர்கள் மூன்று பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள். பிரியா, சங்கரம்மாள், அபிராமி இந்த மூன்று பேரும் கூட்டம் அதிகமுள்ள பேருந்துகளில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது திடுக்கிடும் தகவல்.

இந்த மூண்டு பேரும், இஸ்லாமிய பெண்களை போல பர்தா அணிந்து கொண்டு தங்கள் அடையாளத்தை மறைப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும்  இவர்கள் ஏற்கனவே திருடி வைத்திருந்த 2 சவரன் தங்க சங்கிலியும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!