கொலைக்களமாகும் தமிழகம்! - ஒரே வாரத்தில் 3 அரசியல்வாதிகள் படுகொலை! பாதுகாப்பில் கோட்டை விடுகிறதா தமிழ்நாடு!

By Dinesh TG  |  First Published Jul 9, 2024, 4:22 PM IST

கடந்த வெள்ளிக்கிழமை BSP தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோல் மேலும் இரு அரசியல் கட்சியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 


தமிழ்நாட்டில் கடந்த ஒரே வாரத்தில் 3 அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு கொலை சென்னையிலும், அடுத்த இரு கொலைகள் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கடந்த வாரம் பைக்கில் வந்த சில மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். டி புஷ்பநாதன் என்ற அதிமுக பிரமுகர் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, ​மற்றொரு ​பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர், கத்திகளை காட்டி வழிமறித்ததாக கூறப்படுகிறது. புஷ்பநாதன் பைக்கை விட்டு உயிருக்கு பயந்து ஓடியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, கும்பல் அவரைப் பிடித்து வெட்டிக் கொன்றது. புஷ்பநாதன் ரியல் எஸ்டேட் மற்றும் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதுதொடர்பாக, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறைச்சி வியாபாரம் தொடர்பாக புஷ்பநாதனுக்கும், மர்ம கும்பலுக்கும் முன்விரோதம் இருப்பது தெரியவந்துள்ளது.

Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?

இச்சம்பத்தைத் தொடர்ந்து, பாமக தொண்டர் சங்கர் என்பவரை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக சங்கர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. மேலு், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரர் கொல்லப்பட்ட வழக்கில் சங்கர் ஒரு சாட்சி என்று பாமக தலைவர் குறிப்பிடுள்ளார். "கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என சங்கரை மிரட்டி வருகின்றனர். அந்த மிரட்டல் குறித்து, சங்கர் போலீசில் புகார் அளித்தும், எந்த பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் போலீஸார் தரப்பில் எடுக்கப்படவில்லை," என்று ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

Tap to resize

Latest Videos

undefined

விசாரணை முடியல! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ல! அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்தலாமா? ரஞ்சித்துக்கு திமுக பதிலடி

இவ்விரு சம்பவங்களை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தலித் மக்களுக்காக ஆதரவாக போராடி வரும் ஆம்ஸ்ட்ராங், வட சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் பிரபலமாக அறியப்படுகிறார். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  Armstrong Murder News: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்? வெட்டிய விதத்தை பார்த்தா இவங்களா இருக்குமோ?

click me!