திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உட்பட 3 நபர்கள்போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் விடுதியில் 17வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரது மகன் பிரபின் கிறிஸ்டல்ராஜ் (வயது 40) என்பவரும், திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த முத்து என்பவரது மனைவி ரமீஜாபானு (50) என்பவரும் சேர்ந்து 17வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
மேலும் அச்சிறுமியை அச்சுறுத்தி பிரபின் கிறிஸ்டல்ராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரித்த மாவட்ட குழந்தை நல அலுவலர் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போக்சோ, விபசார தடுப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.
undefined
திருச்சியில் காவல் நிலைய வாசலில் காதலன் செய்த செயலால் காவலர்கள், பெற்றோர் அதிர்ச்சி
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கிறிஸ்டல்ராஜ் கடந்த 15 வருடங்களாக தொலைகாட்சி நிறுவனங்களில் நிருபராக வேலை பார்த்து, தற்போது “சிலந்தி வலை” என்ற மாதாந்திர பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். ரமீஜாபானுவுடன் சேர்ந்துக்கொண்டு பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், அச்சிறுமியை பிரபின் கிறிஸ்டல்ராஜ் கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இந்த பிரச்சினைகளுக்கு சிறுமியின் தாயார் செல்லம்மாள் (50) உடந்தை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் மூவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்று பொள்ளாச்சி, இன்று காங்கேயம்; போதை பெண்ணின் தொடர் ரகளையால் வாகன ஓட்டிகள் எரிச்சல்
சிறுமியிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியை பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (29) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சிறுமி மீண்டும் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்த நிலையில், கடன் தொல்லையால் சிறுமியை ரமீஜா பானுவின் வீட்டிற்கு வேலைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் குடும்ப சூழலை பயன்படுத்திக்கொண்டு ரமீஜா பானு, பிரபின் கிறிஸ்டலுடன் இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்துகொண்ட பாலமுருகனை குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் துறையினர் தேடி வருகின்றனர்.