உறவினருடன் சண்டையிட்டு வெளியேறிய இளம்பெண்; நம்பவைத்து ஆசையை தீர்த்துக்கொண்ட காமுகன்கள்

By Velmurugan s  |  First Published Oct 3, 2023, 3:59 PM IST

புதுச்சேரியில் சககோதரியுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய இளம்பெண்ணை அடைக்களம் தருவதாகக் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கன்னியாக்குமாரியை சேர்ந்த 22 வயதுடைய பெண் புதுவை திப்புராயப்பேட்டை பகுதியில் வசிக்கும் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் தனது அக்காவிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக அவர் ஆட்டோ ஒன்றில் புதிய பேருந்து நிலையம் சென்றுள்ளார். 

ஆனால் ஊருக்கு செல்ல கையில் பணம் இல்லாததால் எங்கு செல்வது என தெரியாமல் குழம்பியுள்ளார். அந்த பெண் குழம்பியதை அறிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை முதலியார்பேட்டை அனிதாநகர் பெட்ரோல் நிலையம் அருகே அழைத்து வந்து, அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

பாஜகவை விட்டு விலகுவதும், உடலில் கொள்ளிகட்டையை வைப்பதும் ஒன்று தான்; பழனிசாமிக்கு தினகரன் எச்சரிக்கை

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த பெண் சத்தம் போடவே, பயந்து போன ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை அங்கேயே இறக்கி விட்டுவிட்டு சென்றுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த 3 பேர் அந்த பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளனர். அந்த பெண்ணுக்கு தங்க இடம் கொடுப்பதாகக் கூறி, அனிதா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணுக்கு 3 பேரும் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

திடீரென ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட மூதாட்டி; சாதுர்யமாக மூதாட்டியை காப்பாற்றிய பெண் கேட் கீப்பர்

2 நாட்கள் அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இதனிடையே அந்த இளம்பெண் அவர்கள் 3 பேரும் இல்லாத நேரத்தில் அங்குள்ள கடைக்கு வந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வாளர் இனியன் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டனர். 

இதனையடுத்து அந்த பெண்ணை கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் சாதிக்பாட்ஷா, தினேஷ், அரவிந்தன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் ஒருவரை தேடிவருகின்றனர். இச்சம்பவம் முதலியார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!