முடிஞ்சா நகையை கண்டுபிடிங்க பார்க்கலாம்.. திருடிய வீட்டில் மாஸ் காட்டிய திருடன்.. குழம்பிய காவலர்கள் !

Published : Oct 02, 2022, 07:46 PM IST
முடிஞ்சா நகையை கண்டுபிடிங்க பார்க்கலாம்.. திருடிய வீட்டில் மாஸ் காட்டிய திருடன்.. குழம்பிய காவலர்கள் !

சுருக்கம்

நெய்வேலி அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 25 சவரன் நகை பூட்டை உடைத்து கொள்ளை அடித்த திருடர்கள் செய்த கில்லாடி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் உள்ள வி கே சாமி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷாகி நிஷா. இவர் பண்ருட்டி அடுத்த காங்கிருப்பு அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் வெளிநாட்டில் உள்ள தனது கணவரை பார்க்கச் சென்றுள்ளார் ஷாகி நிஷா.

இதையும் படிங்க..ராஜராஜ சோழன் இந்துவா.? அந்த தற்குறி சொல்லட்டும்.! இயக்குனர் வெற்றிமாறனை எச்சரித்த எச்.ராஜா.!

இதை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து, படுக்கையறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 25 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து விட்டு வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்து விட்டு சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்த ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்று விட்டனர்.

இதேபோல அடுத்து இரண்டு வீடுகளிலும் பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரில் நெய்வேலி டவுன்ஷிப் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இன்று சம்பவம் நடந்த இடத்தில் கைரேகை, தடயவியல் நிபுணர்கள் மற்றும் கடலூர் மாவட்ட மோப்பநாய் கூப்பர் உதவியுடன் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க..கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கெஞ்சிய மனைவி - மகள்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் 25 பவுன் தங்க நகைகளை திருடியது மட்டுமில்லாமல், அவ்வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைப் பதிவுசெய்யும் ஹார்ட் டிஸ்கையும் அடுத்தடுத்த 2 வீடுகளில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் திருடிச் சென்றுவிட்டான் அந்த மர்ம திருடன். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!