23 வயது பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி கணவன் செய்த காரியம்.. 18 பேர் கைது. கள்ளக்காதலுக்கு பினிஷ்மென்ட்.

Published : Jul 15, 2021, 01:47 PM ISTUpdated : Jul 15, 2021, 01:48 PM IST
23 வயது பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி கணவன் செய்த காரியம்.. 18 பேர் கைது. கள்ளக்காதலுக்கு பினிஷ்மென்ட்.

சுருக்கம்

இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி அந்தப் பெண்ணின் கணவனும்,  சில ஆண்களும் சேர்ந்து அந்தபெண்ணை அடித்து இழுத்துவந்து  நடுவீதியில் நிர்வாணமாக்கி  சிறுவர்கள், கிராம மக்கள் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

குஜராத் மாநிலத்தில் 23 வயது பெண்ணை நிர்வாணப்படுத்தி வீதி உலா அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய அந்தப் பெண்ணின் கணவன் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதை அடுத்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கண்டன குரல் எழுந்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்தின் தன்பூர் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 23 வயதான அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிறது. ஆனால் திருமணம் செய்தது முதல் அவரது கணவர் அடித்து துன்புறுத்தி வந்ததால், அந்தப் பெண்ணுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த  வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டது, பின்னர் அது நாளடைவில் காதலாக மாறி அந்தப் பெண் அந்த அணுடன் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவானார். இருப்பினும் கணவரும் அவரது உறவினர்களும் அவ்விருவரையும் கண்டுபிடித்த அந்த பெண்ணை மீட்டு மீண்டும் கிராமத்திற்கு அழைத்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி அந்தப் பெண்ணின் கணவனும்,  சில ஆண்களும் சேர்ந்து அந்தபெண்ணை அடித்து இழுத்துவந்து  நடுவீதியில் நிர்வாணமாக்கி  சிறுவர்கள், கிராம மக்கள் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பின்னர் கணவனை தோளில் சுமந்து கொண்டு செல்லும்படி அந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்துகின்றனர். அந்தப் பெண்ணும் கணவனை தோளில் சுமந்தபடி உலா வருவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அங்கிருந்த சில பெண்கள் அந்த பெண்ணின் நிர்வாணத்தை மறைப்பதற்காக முயற்சிக்கின்றனர். ஆனால் அங்கிருந்த ஆண்கள் சிலர் அதை தடுப்பது போன்ற காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் செவ்வாய்க்கிழமை அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு வீடியோவில் அடையாளம் காணப்பட்ட கணவன் மற்றும்  அவரது உறவினர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தாக்குதல் நடத்தியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது. கொலை மிரட்டல் விடுத்தது. பெண்ணை பொது இடத்தில் மானபங்கப் படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ரூ.2000 கொடுத்தா இளம்பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்.. போலீஸ் என்று தெரியாமல் வசமாக சிக்கிய கும்பல்
பகலிலேயே கொழுந்தியாளை படுக்கைக்கு அழைத்த அனுமந்தன்! வர மறுத்ததால் வெறியில் கொன்*றேன்! பகீர் வாக்குமூலம்!