சிறுமியை ஆசைதீர அனுபவித்து சீரழித்த வாலிபர்..! 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையளித்து நீதிமன்றம் அதிரடி..!

Published : Feb 28, 2020, 04:13 PM IST
சிறுமியை ஆசைதீர அனுபவித்து சீரழித்த வாலிபர்..! 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையளித்து நீதிமன்றம் அதிரடி..!

சுருக்கம்

குற்றம் நிரூபிக்கப்பட்டு மெக்கானிக் கார்த்திக்குக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதம் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(31). மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயது சிறுமியான இவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் சிறுமிக்கும் கார்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் நெருங்கி பழகிய கார்த்திக் அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

சிறுமியும் அவருடன் பழகி வந்த நிலையில் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறிய கார்த்திக் கடந்த 2016 ம் ஆண்டு ஜனவரியில் சிறுமியிடன் உல்லாசம் அனுபவித்திருக்கிறார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  உடனடியாக கார்த்திக் மீது மகளிர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த காவலர்கள் சிறையில் அடைத்தனர்.

35 வயது அண்ணன் மகனுக்கு 12 வயது மகளை திருமணம் செய்து வைத்த தாய்..! குடும்பத்தினரோடு அதிரடி கைது..!

இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டு மெக்கானிக் கார்த்திக்குக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதம் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்குஅரசு சார்பாக ரூ.1.25 லட்சம் இழப்பீடாக வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

8 வயது சிறுமியை பல மாதங்கள் சீரழித்த பாதிரியார்..! ஜெபக்கூட்டத்தில் அத்துமீறிய கொடூரம்..!

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!