8 வயது சிறுமியை பல மாதங்கள் சீரழித்த பாதிரியார்..! ஜெபக்கூட்டத்தில் அத்துமீறிய கொடூரம்..!

Published : Feb 28, 2020, 03:15 PM IST
8 வயது சிறுமியை பல மாதங்கள் சீரழித்த பாதிரியார்..! ஜெபக்கூட்டத்தில் அத்துமீறிய கொடூரம்..!

சுருக்கம்

கடந்த 23ம் தேதி ஞாயிறு அன்று வழக்கம் போல குடும்பத்தினருடன் ஜெபக்கூட்டத்திற்கு சிறுமி வந்திருக்கிறார். அப்போதும் பாதிரியார் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, பாதிரியாரின் செயல் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(52). மதபோதகராக இருந்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே இருக்கும் வடக்கன்குளத்தில் வசித்து வரும் செல்வராஜ், அங்கிருக்கும் அன்புநகரில் கடந்த 20 வருடங்களாக ஜெபக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்.

இவரது ஜெபக்கூட்டங்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. அதில் ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற சிறுமியும் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். 8 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்தநிலையில் சிறுமியிடம் நன்றாக பழகிய பாதிரியார் செல்வராஜ், அவரை பலமுறை தனிமையில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது கடந்த சில மாதங்களாக நடந்திருக்கிறது. அதை வெளியே யாரிடமும் கூற கூடாது என்று செல்வராஜ் சிறுமியை மிரட்டவும் செய்துள்ளார்.

35 வயது அண்ணன் மகனுக்கு 12 வயது மகளை திருமணம் செய்து வைத்த தாய்..! குடும்பத்தினரோடு அதிரடி கைது..!

கடந்த 23ம் தேதி ஞாயிறு அன்று வழக்கம் போல குடும்பத்தினருடன் ஜெபக்கூட்டத்திற்கு சிறுமி வந்திருக்கிறார். அப்போதும் பாதிரியார் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, பாதிரியாரின் செயல் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர்கள் செல்வராஜிடம் தகராறில் ஈடுபட்டதுடன் வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் பாதிரியாரை கைது செய்த காவல் துறை சிறையில் அடைத்தது. அவர் மீது போக்சோவில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பேத்தி வயது சிறுமியிடம் காமத்தை காட்டிய கிழவன்..! தனிமையில் அத்துமீறிய கொடூரம்..!

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!