சபரிமலைக்கு சென்ற இவர்கள் யார் என்று தெரிகிறதா? கிழித்தெறியப்படும் முகமூடி...

By sathish kFirst Published Dec 24, 2018, 7:59 PM IST
Highlights

சபரிமலை பக்தர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கனும், சபரிமலை புனிதத்தை கெடுப்பதற்க்காக முயற்சிசெய்து  அமைதியைக் குலைக்கும் விதமாக அட்டூழியங்கள் அரங்கேறி வருகிறது. சபரிமைலைக்கும் ஜாதிக்கும் என்ன சம்பந்தம். ஜாதிக்கு அப்பாற்பட்டது சபரிமலை தான் என சொல்லுபவர்கள், கடவுள் இல்லைன்னு சொல்றவங்களுக்கு சபரிமலையில் என்ன வேலை? 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்ய சென்ற 50 வயதுக்கும் குறைவான பெண் பக்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தமிழகத்துக்கு திரும்ப அனுப்பப்பட்டனர். சபரிமலையில் மீண்டும் பதற்றம் வைத்த நிலையில், சபரி மலைக்கு தரிசனம் செய்ய சென்ற பெண்கள் யார்? போட்டோ போட்டு கிழித்தெடுக்கின்றனர் சமூக வலைதள வாசிகள்.

டிசம்பர் 23 அன்று 10 முதல் 50 வயதுள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் சபரிமலை செல்லும் நோக்கில் பம்பையில் கூடவுள்ளதாக 'மனிதி' எனும் பெண்கள் அமைப்பு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள இடுக்கி - கம்பமேடு வழியை காலை 3.30 மணிக்கு வந்தடைந்த பெண்கள், சபரிமலைக்கு செல்லும் வழியில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 30-40 போராட்டக்காரர்கள் அய்யப்பன் குறித்து கோஷங்களை எழுப்ப தொடங்கியவுடன், திருவனந்தபுரத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 11 பெண்களும் மாவோயிஸ்டுகள் என்றும் கேரளாவின் சட்டம் மற்றும் அமைதியை குலைக்கவே அவர்கள் விரும்புகின்றனர் என்றும் பகீர் குற்றச்சாட்டு கிளம்பியது.

கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள் பம்பையில் உள்ள போலிஸ் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் நாங்கள் திரும்பிதான் செல்ல வேண்டும்" என்று மனிதி அமைப்பை சேர்ந்த செல்வி தெரிவித்தார்.

கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்களில் ஆறுபேர் பக்தர்கள், பிறர் செயற்பாட்டாளர்கள். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சபரிமலை கோயிலுக்கு செல்ல முற்பட்ட பெரிய பெண்கள் கூட்டம்  இது தான். 

"தமிழகத்தை சேர்ந்த அந்த பெண்கள் மாவோயிஸ்டுகள் என்றும், கேரளாவின் சட்டம் மற்றும் அமைதியை குலைக்கவே அவர்கள் விரும்புகின்றனர் என சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பான, சபரிமலை கர்மா சமிதியை சேர்ந்த குமார் தெரிவித்துள்ளார்.

கடவுளே இல்லைனு சொல்லி பேசி ஊரை ஏமாத்திட்டு இவங்க கோயிலுக்கு போவாங்களாமா இதற்கு பேர் தான் பகுத்தறிவா?

click me!