அய்யோ என்ன காப்பாத்துங்க.. ஓடும் பேருந்தில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்..நாட்டை உலுக்கிய அடுத்த அதிர்ச்சி

Published : Jun 09, 2022, 08:09 AM IST
அய்யோ என்ன காப்பாத்துங்க.. ஓடும் பேருந்தில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்..நாட்டை உலுக்கிய அடுத்த அதிர்ச்சி

சுருக்கம்

கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டிடையே உலுக்கியது. தற்போது பீகாரில் அதேபோன்று சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பீகாரில் ஓடும் பேருந்தில் வைத்து சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டிடையே உலுக்கியது. தற்போது பீகாரில் அதேபோன்று சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

இந்நிலையில், பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தின் பெட்டியா பகுதியில் பாட்னாவிற்கு செல்வதற்காக  சிறுமி ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளனர். இதனால், அரைமயக்க நிலையில் இருந்தபோது 3 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதுதொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க;- மட்டையாகும் அளவிற்கு சரக்கை ஊத்தி கொடுத்த மனைவி.. இறுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்..!

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!