ராஜன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 17 வயது சிறுவன் கடந்த 6 நாட்களாக சிறுமியை அந்த வீட்டில் வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் ராஜன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயது சிறுமியான இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனால் சிறுமியை எங்கும் காணவில்லை. இதையடுத்து சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
undefined
அதன்படி வழக்கு பதிவு செய்த காவலர்கள் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். சிறுமி வசிக்கும் பகுதியில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்டோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சிறுமி அடைத்துவைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார் சிறுமியை அதிரடியாக மீட்கப்பட்டனர். அவரிடம் விசாரணை செய்ததில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தது.
இதனால் சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கூறும்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 17 வயது சிறுவன் கடந்த 6 நாட்களாக சிறுமியை அந்த வீட்டில் வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் ராஜன் அதிரடியாக கைது செய்யப்பட்டான். சிறுவன் மீது போக்சோவின் கீழ் வழக்குபதியப்பட்டு தஞ்சையில் இருக்கும் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளான்.