திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் அரிவாள் வெட்டு சம்பவத்தில் 15 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் 9 பேர் மதுரை, திண்டுக்கல் மருத்துவமனைகளில் அனுமதி.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள மெய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லச்சாமி. இவரது மகன் சூரியபிரசாந்த் (வயது 22). இவர் டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான சுகன்யா (38) என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சுகன்யாவுடன் பழகுவதை தவிர்த்து பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுகன்யா தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறி சூரிய பிரசாந்த்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சுகன்யா தனது உறவினர்கள் சிலரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். மதுரையில் உள்ள தனது உறவினர்களை வரவழைத்து நேற்று இரவு சூரியபிரசாத் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
undefined
நாகையில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு? உறவினர்கள் வாக்குவாதம்
இதனையடுத்து நத்தம் காவல் துறையினர் நேற்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இன்று அதிகாலை சுகன்யாவின் உறவினர்கள் சூரிய பிரசாந்த் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பினரும் அரிவாள், இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர்.
குமரியில் பரபரப்பு; இளம் பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் கைது
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.