ஆசைவார்த்தை கூறி ஆசை தீர உல்லாசம்.. பலாத்கார வீடியோவை காட்டி 3 பேர் செய்த காரியத்தால் பள்ளி மாணவி கர்ப்பம்.!

Published : Apr 25, 2022, 11:19 AM IST
ஆசைவார்த்தை கூறி ஆசை தீர உல்லாசம்.. பலாத்கார வீடியோவை காட்டி 3 பேர் செய்த காரியத்தால் பள்ளி மாணவி கர்ப்பம்.!

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதி பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி திடீரென வீட்டில் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு பெற்றோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

ஆரணி அருகே பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவி திடீர் மயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதி பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி திடீரென வீட்டில் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு பெற்றோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

ரகசியமாக வீடியோ

இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் வாலிபர் ஒருவர்  காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை அந்த மாணவிக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வாலிபர் மாணவியுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வீடியோவை தனது நண்பர்களிடம் காட்டியுள்ளார். 

பாலியல் பலாத்காரம்

இதையடுத்து அவரது நண்பர்கள் 3 பேர் அந்த மாணவியிடம் வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தைக்கு மண்டை உடைப்பு