சிறுவனின் உயிரை பறித்த குளிர்பானம்.. ஆசிட் கலந்த குளிர்பானத்தால் நேர்ந்த விபரீத சம்பவம்

By Raghupati R  |  First Published Oct 17, 2022, 7:16 PM IST

ஆசிட் கலந்த குளிர்பானம் அருந்திய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வின். இவருக்கு வயது 11. அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்தார்.இந்நிலையில், மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து கேரளா மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க..Google Diwali 2022: தீபாவளிக்கு கூகுள் கொடுத்த அசத்தல் ‘சர்ப்ரைஸ்’! மறக்காம இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!

ஆசிட் கலந்த குளிர்பானம் :

மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் அஸ்வின் ஆசிட் திரவம் உட்கொண்டதாகவும், அதனால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மாணவன் உயிரிழப்பு :

கடந்த இரண்டு நாட்களாக சிறுவனின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் இன்று தற்போது சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும்  ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த கேரளா அரசு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

click me!