அந்தரத்தில் மோதி கொண்ட ரோப் கார்கள்.. பலர் படுகாயம்.... நடுவழியில் சிக்கிக் கொண்ட 50 பேர் கதி?

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 11, 2022, 09:53 AM ISTUpdated : Apr 11, 2022, 10:10 AM IST
அந்தரத்தில் மோதி கொண்ட ரோப் கார்கள்..  பலர் படுகாயம்.... நடுவழியில் சிக்கிக் கொண்ட 50 பேர் கதி?

சுருக்கம்

கேபிள் கார்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தின் டியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பையத்யநாட் கோயிலில் செயல்பட்டு வந்த ரோப்கார் ஒன்றோடு ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. விபத்து காரணமாக ரோப் கார்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. விபத்தில் சிக்கி இரண்டு பேர் பலத்த காயமுற்றனர். மேலும் பத்து சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். 

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ரோப் காரின் 12 கேபின்களில் சிக்கியுள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. கேபிள் கார்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

மருத்துவமனையில் அனுமதி:

விபத்து ஏற்பட்டதும் ரோப் காரில் இருந்து கீழே குதித்த தம்பதியினருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். ரோப் கார் விபத்து ஏற்பட்டதை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். விபத்து களத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை துணை கமிஷ்னர் மஞ்சுநாத் பஜந்த்ரி மற்றும் எஸ்.ஐ. சுபாஷ் சந்திரா ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர். 

மீட்பு பணிகள் மும்முரம்:

"இங்கு நிலைமை முழு கட்டுப்பாட்டுக்கு வந்து இருக்கிறது. இன்னும், சிலர் கேபிள் கார்களில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து சுற்றுலா பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடன் இணைந்து உள்ளூர் மக்களும் உதவி செய்து வருகின்றனர்," என துணை கமிஷ்னர் மஞ்சுநாத் பஜந்த்ரி தெரிவித்தார். 

நீண்ட ரோப்வே:

இந்தியாவின் மீிக நீண்ட செங்குத்தான ரோப்வே இது என ஜார்கண்ட் சுற்றுலை துறை தெரிவித்து இறுக்கிறது. இந்த ரோப்பே பாபா பையத்யநாத் கோயிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் நீளம் 766 மீட்டர்கள் ஆகும். மலைப்பகுதியில் மட்டும் 392 மீட்டர்கள் அதிகம் ஆகும். இந்த ரோப்வேயில் மொத்தம் 25 கேபின்கள் உள்ளன. ஒவ்வொரு கேபினிலும் நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை