11 ஆயிரம் கட்டினால் 1 லட்சம்.. ஒரே மாதத்தில் 450 பேருக்கு கோவிந்தா போட்ட கோவிந்தராஜன்.. 45 லட்சம் அபேஸ்.

Published : Oct 13, 2022, 07:06 PM IST
11 ஆயிரம் கட்டினால் 1 லட்சம்.. ஒரே மாதத்தில் 450 பேருக்கு கோவிந்தா போட்ட கோவிந்தராஜன்.. 45 லட்சம் அபேஸ்.

சுருக்கம்

11000 கட்டினால் 45 நாட்களில் குறைந்த வட்டியில் 1 லட்சம் ரூபாய் வாங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி சுமார்  450 பேரிடம் 45 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது . 

11000 கட்டினால் 45 நாட்களில் குறைந்த வட்டியில் 1 லட்சம் ரூபாய் வாங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி சுமார்  450 பேரிடம் 45 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. முன்னாள் கோடக் மகேந்திரா வங்கி மேலாளர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

காலம் மாற மாற மோசடி பேர்வழிகளின் எண்ணிக்கையும் சமூகத்தில் அதிகரித்துள்ளது. ஆசை வார்த்தை கூறி பொது மக்களை நம்ப வைத்து அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை வங்கி ஊழியர் மோசடி செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் கோடக் மகேந்திரா வங்கியில் மேலாளராக  பணியாற்றி வந்த நிலையில் சமீபத்தில் அப்பணியில் இருந்த நீக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்: கேரளா நரபலி கொடூரம்..! கொலையாளிகள் போலீசில் சிக்கியது எப்படி..? மேலும் 12 பெண்களில் நிலை என்ன..?

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வேலை தேடி சென்னைக்கு வந்தார். அப்போது அமைந்தகரையில் என்.எஸ்.கே நகரில் எல்.எம்.ஆர் குரூப் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதில்  பொதுமக்களை கவரும் வகையில் விதவிதமான அறிவிப்புகளுடன் விளம்பர பலகைகளை வைத்து, 11 ஆயிரம் கட்டினால் 45 நாட்களில் 1 லட்ச ரூபாய் லோன் பெற்று தரப்படும் என்றும் அது 45 நாட்களில் பணம் வங்கிக் கணக்கிற்கு வரும் என்றும் கூறினார். மேலும் ஆண்டு முழுவதும் தொலைபேசி எண்ணுக்கு ரீசார்ஜ் செய்து தரப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்: சித்தி மகனுடன் தகாத உறவு.. குழந்தையை பெற்றெடுத்த 15 வயது பள்ளி மாணவி - பகீர் சம்பவம்

இதை பார்த்த பொதுமக்கள் கோவிந்தராஜன் அலுவலகத்தில் குவியத் தொடங்கினர். கிட்டத்தட்ட 450 க்கும் அதிகமானோர் அவரிடம் 1 லட்ச ரூபாய் வட்டிப் பணத்திற்காக 11,000 செலுத்தினார். இந்நிலையல் பொது மக்களிடம் இருந்து 45 லட்ச ரூபாய் வரை வசூல் செய்தார். பின்னர் அந்த படத்துடன் அவர் மாயமானார்.

இதில் 45 நாட்கள் ஆகியும் வங்கிக் கணக்கிற்கு பணம் வராததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அது குறித்து கோவிந்தராஜனை தேடினர். ஆனால் அவர் இல்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொது மக்கள் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கோவிந்தராஜன் கைது செய்தனர். 
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தைக்கு மண்டை உடைப்பு
வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி