India Corona: 2 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த கொரோனா..இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,614..

By Thanalakshmi VFirst Published Mar 12, 2022, 2:44 PM IST
Highlights

India Corona: இந்தியாவில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,614 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 2020 மே மாதத்திற்கு பிறகு மிக குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

India Corona: இந்தியாவில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,614 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 2020 மே மாதத்திற்கு பிறகு மிக குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.இன்றை கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,614 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா பாதித்தவர்களில் எண்ணிக்கை 4,29,87,875 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 40,559 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றிற்கு  89 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,15,803 ஆக உள்ளது. இதில் நேற்று தமிழகத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. ஏனவே 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய தினம் கொரோனா மரணமில்லாத நாளாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க: TN Corona: தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா… கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை!!

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம், 98.71 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,31,513 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 179.91 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா எதிராக முதன்முதலாக இந்தியாவில் கடந்த 2021 ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக அளவில் இதுவரை 45 கோடி பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 60 லட்சம் பேர் தொற்றின் தீவிரத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் டிசம்பர் இறுதி மாதம் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்ட நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு ட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ,கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: Corona : குட் நியூஸ் மக்களே ! கொரோனா பற்றி வெளியான முக்கிய தகவல்

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே 500 பேர் மிகாமல் கலந்துக்கொள்ளும் வகையில் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு, நேர கட்டுப்பாடு உள்ளிட்டவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

click me!