முதல்வரே ஊரடங்கை கடுமையாக்குங்கள்.. ஒத்த குரலில் கருத்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள்.

By Ezhilarasan Babu  |  First Published May 22, 2021, 1:05 PM IST

பால், காய்கறி, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர்த்து முழுமையான ஊரடங்கு அவசியம் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்


பால், காய்கறி, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர்த்து முழுமையான ஊரடங்கு அவசியம் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடுமையான ஊரடங்கு அவசியம் என அனைத்து கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தொற்றால் அதிக உயிரிழப்பை சந்திக்கும் மாநிலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையைவிட பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. நாளொன்றுக்கு குறைந்தது  34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு மே 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அறிவித்தது, அது நடைமுறையிலுள்ளது. மேலும் கடந்த 15 ஆம் தேதிமுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனாலும் வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. 

Latest Videos

undefined

இதனால், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, மருத்துவ வல்லுநர் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது அதில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு கடுமையான ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சருக்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்திற்குப் பின்னர் அதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தெரிவித்திருப்பதாவது. 

அதிமுக -விஜயபாஸ்கர்:  பால், காய்கறி, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர்த்து முழுமையான ஊரடங்கு அவசியம். நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று பொருட்கள் வழங்கலாம்.
 

எழிலன் - திமுக:  கிராமங்களில் 100 பேருக்கு ஒரு சுகாதார ஊழியர் என நியமிப்பது அவசியம். கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு

காங்கரஸ்- முனிரத்தினம்: அரசு எடுக்கும் முயற்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் எனவும், தீவிர ஊரடங்கு அவசியம் எனவும்வலியுறுத்தியுள்ளார் . 

பாஜக - நயினார் நாகேந்திரன்:  முழு தீவிர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்வர்களும் முன்களப்பணியாளராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

பா.ம.க - ஜி.கே. மணி:  Ct scan பரிசோதனைக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். 5 நாட்களுக்கு  ஒரு நாள் மட்டுமே அத்தியாவசிய கடைகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும். தீவிர ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் அனைத்து கட்சி கூட்டம்  நடத்த வேண்டும். ரெம்டெசிவர் மருந்து மாவட்ட அளவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

click me!