பயங்கர அதிர்ச்சி.. கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து.. பரபரப்பு.

By Ezhilarasan Babu  |  First Published May 22, 2021, 12:38 PM IST

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்ததில் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. 


கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்ததில் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வாகனத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாக பரவி வருகிறது.  

Tap to resize

Latest Videos

undefined

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் மிக தீவிரமாக பரவி வருகிறது.  குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி தீவிரமாக உள்ளது. தொடர்ந்து கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் பணியில் 108 ஆம்புலன்ஸ்கள் 24 மணி நேரமும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆம்புலன்ஸ், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது  திடீரென்று சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் மளமளவென ஆம்புலன்ஸ்  முழுவதும் தீ வேகமாக பரவியது, இதில் முற்றிலுமாக ஆம்புலன்ஸ் வாகனம் தீயிலிருந்து சேதமடைந்தது, 

தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ஆம்புலன்ஸில் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த ஆம்புலன்சில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இதற்கு முன்னர்  இதே போல கடந்தாண்டு செப்டம்பர் மாதம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது தமிழகம் முழுவதும் உள்ள 108 ஆம்புலன்சில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களின் தரத்தை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் கூட தற்போது மீண்டும் இந்த விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

 

click me!