இது லாக்டவுன்தான்.. ஆனாலும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது.. அமைச்சருக்கு உத்தரவு போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.

By Ezhilarasan Babu  |  First Published May 25, 2021, 12:33 PM IST

பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்கள் விநியோகத்தை மேலும் விரிவுப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்கள் விநியோகத்தை மேலும் விரிவுப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர். 

Latest Videos

undefined

நேற்றைய தினம் முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவையான காய்கறிகள், பழங்கள் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை மூலம் வாகனங்களில் விற்பனை செய்யப்படுவதாக கூறினார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோட்டக்கலை, வேளாண்துறை,சென்னை மாநகர அதிகாரிகளுடன் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகவும், நேற்று மட்டும் சென்னையில் 1670 வாகனங்களில் 1400 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இதேப்போல, மாநில முழுவதும் 4626 வாகனங்களில் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

மேலும், இன்றைய தினம் 13,096 வாகனங்களில் 6,500 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு எடுத்து செல்லுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.மேலும் இதனை  விரிவுபடுத்த முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் நஷ்டம் அடையாத வகையில் சந்தை படுத்த வேண்டும்; பொதுமக்கள் முறையாக சமூக இடைவெளி கடைபிடிக்கும் வண்ணம் விற்பனை செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

click me!