தனியார் நிறுவனம் சார்பில் 1 கோடி மதிப்பில் கொரோனா தடுப்பு பணிக்கான 26 மின் - ஆட்டோக்களை அமைச்சர் சேகர்பாபு , சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர்.
தனியார் நிறுவனம் சார்பில் 1 கோடி மதிப்பில் கொரோனா தடுப்பு பணிக்கான 26 மின் - ஆட்டோக்களை அமைச்சர் சேகர்பாபு , சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர்.
undefined
கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள 26 மூன்று சக்கர மின்சார வாகனங்களின் செயல்பாட்டை அமைச்சர் சேகர்பாபு , சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தனர். சென்னை செனாய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு , சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் , நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு டாட் எனும் தனியார் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார வாகனங்களை அண்ணா நகர் மண்டல அலுவலர் செந்தில்குமார் வசம் ஒப்படைத்தனர்.
1கோடி ரூபாய் மதிப்பிலான 26 மூன்று சக்கர வாகனங்களில் 24 வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும், 2 வாகனங்கள் மருத்துவமனை கழிவுகளை கையாளும் பணியிலும் ஈடுபட உள்ளன. கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்கள் காற்றில் தெளித்தல் , சாலைகளில் தெளித்தல் , கைக் கருவி மூலம் தெளித்தல் எனும் மூன்று முறைகளில் செயல்பட உள்ளது. மூன்று சக்கர வாகனங்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்த பின்னர் உதயநிதி ஸ்டாலின் வாகனம் ஒன்றை இயக்கி சோதனை செய்தார் என்பது குறிப்பிடதக்கது.