Corona : ஒரே நாளில் 2,745 பேருக்கு கொரோனா பாதிப்பு.. அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.. அதிர்ச்சி தகவல்

Published : Jun 01, 2022, 10:53 AM IST
Corona : ஒரே நாளில் 2,745 பேருக்கு கொரோனா பாதிப்பு.. அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.. அதிர்ச்சி தகவல்

சுருக்கம்

India Corona : கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு 6  பேர் பலியாகியுள்ள நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  5,24,636ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் புதிதாக கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன் அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. 

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,745  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்  2,706  பேருக்கும், நேற்று 2,338   பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .  இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 832ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு 6  பேர் பலியாகியுள்ள நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  5,24,636ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா பாதித்த 2,236 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,17,810   ஆக உயர்ந்துள்ளது.  

இதையும் படிங்க : BJP : அண்ணாமலை மீது திடீர் வழக்குப்பதிவு.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை - பாஜகவில் உச்சகட்ட பரபரப்பு !

இதையும் படிங்க : UGC: இந்த பல்கலை., பட்ட படிப்புகள் இனி செல்லாது..’யுஜிசி’ சொன்ன அதிர்ச்சி தகவல் ! மாணவர்கள் கதி ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?
குட் நியூஸ்!.. கொரோனா தொற்று இனி அவசரநிலை கிடையாது.. WHO வெளியிட்ட சூப்பர் தகவல்