TN Corona : சுழற்றி அடிக்கும் கொரோனா… 20 ஆயிரத்தை கடந்தது ஒருநாள் பாதிப்பு… தப்பிக்குமா தமிழகம்?

By Narendran S  |  First Published Jan 13, 2022, 7:57 PM IST

தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 20 ஆயிரத்தை கடந்தது. ஒருநாளில் 20,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 20,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 17,934 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,977 அதிகரித்து 20,911 ஆக பதிவாகியுள்ளது. 1,56,402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,911 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 20,911 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 8,218 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 7,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து 8,218 ஆக உள்ளது. 
தமிழகத்தில் 20,886 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 25 பேர் என 20,911 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 25 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,930 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 12 பேரும் தனியார் மருத்துவமனையில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,03,610 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 89,959இல் இருந்து 1,03,610 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 6,235 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,27,960 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,840 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,030 ஆக குறைந்துள்ளது. அதே போல் கோவையில் 981 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,162 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 931 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 901 ஆக குறைந்துள்ளது. மதுரையில் 498 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 599 ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டையில் 373 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 484 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 330 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 410 ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் 388 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 538 ஆக அதிகரித்துள்ளது. திருச்சியில் 444 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 465 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 620 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 502 ஆக குறைந்துள்ளது. இதேபோல் வேலூர் 369, தஞ்சை 346, தூத்துக்குடி 343, விருதுநகர் 293, தி.மலை 289, கடலூர் 278, கிருஷ்ணகிரி 270, நாமக்கல் 228, நீலகிரி 217, திருப்பத்தூர் 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.  

click me!