தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 23,443 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 445 அதிகரித்து 23,888 ஆக பதிவாகியுள்ளது. 1,41,562 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23,888 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 23,888 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 8,305 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 8,591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து 8,305 ஆக குறைந்துள்ளது.
undefined
தமிழகத்தில் 23,865 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 23 பேர் என 23,888 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 29 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,038 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 16 பேரும் தனியார் மருத்துவமனையில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,61,171 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 1,52,348ல் இருந்து 1,61,171 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 15,036 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,89,045 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2,236 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,143 ஆக குறைந்துள்ளது. அதே போல் கோவையில் 2,042 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,228 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 1,018 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 854 ஆக குறைந்துள்ளது. மதுரையில் 640 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 643 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 613 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 777 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 813 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 830 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சையில் 409 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 453 ஆக குறைந்துள்ளது. தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.