குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… தமிழகத்தில் இன்று 941 பேருக்க்உ தொற்று உறுதி!!

By Narendran SFirst Published Aug 10, 2022, 12:15 AM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 972 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 941 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 972 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 941 ஆக குறைந்துள்ளது.

இதையும் படிங்க: குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,167 பேருக்கு பாதிப்பு.. 41 பேர் பலி

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 202 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,033 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,911 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,07,667 ஆக உள்ளது.

இதையும் படிங்க: அனைவரும் மெச்சும் வகையில் செஸ் ஒலிம்பியாட்டை தமிழக அரசு நடத்தியுள்ளது... மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

மாவட்ட வாரியாக: அரியலூர் 4, செங்கல்பட்டு 83, சென்னை 202, கோயம்புத்தூர் 107, கடலூர் 16, தர்மபுரி 6, திண்டுக்கல் 15, ஈரோடு 46, கள்ளக்குறிச்சி 5, காஞ்சிபுரம் 26, கன்னியாகுமரி 22, கரூர் 7, கிருஷ்ணகிரி 32, மதுரை 11, மயிலாடுதுறை 11, நாகப்பட்டிணம் 6, நாமக்கல் 21, நீலகிரி 5, பெரம்பலூர் 1, புதுகோட்டை 6, ராமநாதபுரம் 0, ராணிப்பேட்டை 22, சேலம் 54, சிவகங்கை 16, தென்காசி 13, தஞ்சாவூர் 15, தேனி 17, திருப்பத்தூர் 4, திருவள்ளூர் 29, திருவண்ணாமலை 13, திருவாரூர் 14, தூத்துக்குடி 7, திருநெல்வேலி 23, திருப்பூர் 23, திருச்சி 22, வேலூர் 7, விழுப்புரம் 15, விருதுநகர் 10 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.   

click me!