தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 14,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 14,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 16,096 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 14,013 ஆக பதிவாகியுள்ளது. 1,31,258 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 14,013 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 14,013 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 2,054 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 2,348 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 2,054 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,054 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 37 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,636 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 15 பேரும் தனியார் மருத்துவமனையில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 1,77,999 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 24,576 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 31,59,694 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 1,897 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,696 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 1,308 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,198 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 658 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 562 ஆக குறைந்துள்ளது.
திருவள்ளூரில் 556 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 481 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 1,297 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,159 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 924 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 813 ஆக குறைந்துள்ளது. மதுரையில் 291 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 231 ஆக குறைந்துள்ளது. நெல்லையில் 336 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 295 ஆக குறைந்துள்ளது. சேலத்தில் 851 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 716 ஆக குறைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் 489 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 410 ஆக குறைந்துள்ளது. தஞ்சையில் 394 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 336 ஆக குறைந்துள்ளது. நாமக்கல்லில் 470 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 394 ஆக குறைந்துள்ளது. திருச்சியில் 389 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 347 ஆக குறைந்துள்ளது. காஞ்சிபுரம் 389, ராணிப்பேட்டை 220, கடலூர் 212, விழுப்புரம் 209, தி.மலை 197, தருமபுரி 180, நீலகிரி 169, திருவாரூர் 165, கரூர் 157, திருப்பத்தூர் 152 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.