புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரே நாளில் புதிதாக 742 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரே நாளில் புதிதாக 742 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (பிப். 2) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுச்சேரி மாநிலத்தில் 3,633 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 531 பேர், காரைக்காலில் 136 பேர், ஏனாமில் 65 பேர், மாஹேவில் 10 பேர் என மொத்தம் 742 (20.42 சதவீதம்) பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்பு 1 லட்சத்து 62 ஆயிரத்து 633 ஆக (புதுச்சேரி-1,25,424, காரைக்கால்-22,286, ஏனாம்-8,241, மாஹே-6,682) அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகளில் 146 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 6,706 பேரும் என மொத்தமாக 6,852 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
undefined
மேலும் புதுச்சேரி அரும்பார்த்தபுரம் 84 வயது மூதாட்டி, ராமநாதபுரம் 76 வயது முதியவர், தந்தை பெரியார் நகர் 62 வயது மூதாட்டி, சாந்தி நகர் 89 வயது முதியவர், மணக்குள விநாயகர் நகர் 81 வயது முதியவர், காரைக்கால் நெடுங்காடு பகுதியில் 77 வயது மூதாட்டி என 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. புதிதாக 3,151 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 840 (94.59 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9 லட்சத்து 22 ஆயிரத்து 207 பேருக்கும், இரண்டாவது டோஸ் 6 லட்சத்து 6 ஆயிரத்து 940 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 8 ஆயிரத்து 35 பேருக்கும் என மொத்தமாக 15 லட்சத்து 37 ஆயிரத்து 182 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன." இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.