TN Corona : தமிழகத்தில் 20,000க்கும் கீழ் குறைந்தது கொரோனா... சென்னையில் 3000க்கும் கீழ் குறைந்தது தொற்று!!

By Narendran S  |  First Published Jan 31, 2022, 8:14 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 19,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 19,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 22,238 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 19,280 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 19,276, வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேர் என 19,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,30,457 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 19,280 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 19,280 ஆக உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

சென்னையில் 2,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 3,998 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 2,897 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,897 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 20 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,564 ஆக உள்ளது.

அரசு மருத்துவமனையில் 13 பேரும் தனியார் மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 1,98,130 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 25,056 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 31,09,526 ஆக அதிகரித்துள்ளது. கோயம்புத்தூர் 2456, செங்கல்பட்டு 1430, திருப்பூர் 1425, சேலம் 1101, ஈரோடு 1070 பேருக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

click me!