புதுச்சேரியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உணவகம் மற்றும் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உணவகம் மற்றும் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
. புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனோ தாக்கம் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்திற்குள் குறைந்து வருவதால் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை, வருகின்ற 28-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வி நிறுவனங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.மேலும், கடற்கரைகள் முழு நேரமும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளிலும் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
undefined
அதேநேரத்தில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என புதுச்சேரி அரசு வலியுறுத்தியுள்ளது.ஏற்கனவே ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மால்கள், வணிக நிறுவனங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதேபோல் திரையரங்குகள், உணவகங்கள், கலையரங்கம் உள்ளிட்டவற்றில் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த கட்டுபாடுகளுக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 923 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 3177 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதுச்சேரியில் 650 நபர்களுக்கும், காரைக்காலில் 186 பேர், ஏனாமில் 72 பேரும், மாஹேவில் 15 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தில் தற்போது 11,027 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் மூவர் மற்றும் காரைக்காலில் இருவர் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,928-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மாநிலத்தில் இதுவரை 1,47,792 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,60,747 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசி முதல் தவணை 9,20,981 பேரும், இரண்டாம் தவணை 6,05,041 பேரும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 7,373 பேர் செலுத்திக்கொண்டனர். மொத்தமாக 15,33,395 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.