TN Corona: ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா… 949 ஆக குறைந்தது ஒருநாள் பாதிப்பு!!

By Narendran S  |  First Published Feb 20, 2022, 7:48 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 1,051 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 949 ஆக குறைந்துள்ளது. 80,755 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 949 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 223 ஆக குறைந்துள்ளது.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,980 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் ஒருவரும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 15,938 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 3,172 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 33,91,011 ஆக உள்ளது.

Tap to resize

Latest Videos


சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 157 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 136 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 96 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 92 ஆக குறைந்துள்ளது. ஈரோடு 47, திருப்பூர் 40, சேலம் 33, திருவள்ளூர் 39, காஞ்சிபுரம் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

click me!