TN Corona : தமிழகத்தில் 6200க்கும் கீழ் குறைந்தது தினசரி பாதிப்பு... ஒரே நாளில் 6,120 பேருக்கு தொற்று!!

By Narendran S  |  First Published Feb 6, 2022, 8:29 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 200க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 200க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 9,916 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 6,120 ஆக பதிவாகியுள்ளது. 1,23,537 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,120 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 6,120 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 1,223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 972 ஆக குறைந்துள்ளது.

Latest Videos

undefined

ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 972 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 26 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,759 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 10 பேரும் தனியார் மருத்துவமனையில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 1,21,828 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 23,144 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,51,295 ஆக உள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 1,020 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 911 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 691 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 531 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 609 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 473 ஆக குறைந்துள்ளது. ஈரோடு 397, சேலம் 310, திருவள்ளூர் 256, கன்னியாகுமரி 193, நாமக்கல் 189, கிருஷ்ணகிரி 221, காஞ்சிபுரம் 158, திருச்சி 184, தஞ்சை 184, தி.மலை 83 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

click me!