தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 7524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 9,916 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 7,524 ஆக பதிவாகியுள்ளது. 1,26,701 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7,524 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 1223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 1,475 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 1,223 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,733 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 14 பேரும் தனியார் மருத்துவமனையில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 1,38,878 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 23,938 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,28,151 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 1,224 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1020 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 983 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 691 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 857 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 609 ஆக குறைந்துள்ளது. ஈரோடு 405, சேலம் 386, திருவள்ளூர் 311, கன்னியாகுமரி 223, நாமக்கல் 203, காஞ்சிபுரம் 201, திருச்சி 202, தி.மலை 158, தஞ்சை 143, கிருஷ்ணகிரி 140, தருமபுரி 127, விழுப்புரம் 122, நீலகிரி 120, கடலூர் 117,ராணிப்பேட்டை 113, திருவாரூர் 110 ,நெல்லை 108, கரூர் 107, தருமபுரி 105 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.