TN Corona: தமிழகத்தில் 5000க்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா… ஒரே நாளில் 4,519 பேருக்கு தொற்று!!

Published : Feb 08, 2022, 09:57 PM IST
TN Corona: தமிழகத்தில் 5000க்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா… ஒரே நாளில் 4,519 பேருக்கு தொற்று!!

சுருக்கம்

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 5,104 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 4,519 ஆக பதிவாகியுள்ளது. 1,15,898 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,519 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 839 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 792 ஆக குறைந்துள்ளது.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 37 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,809 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 18 பேரும் தனியார் மருத்துவமனையில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 90,137 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 20,237 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,92,559 ஆக உள்ளது.


சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 807 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 778 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 466 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 398 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 313 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 276 ஆக குறைந்துள்ளது. ஈரோடு 246, சேலம் 251, திருவள்ளூர் 192, கன்னியாகுமரி 122 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?
குட் நியூஸ்!.. கொரோனா தொற்று இனி அவசரநிலை கிடையாது.. WHO வெளியிட்ட சூப்பர் தகவல்