TN Corona : தமிழகத்தில் 12,000க்கும் கீழ் குறைந்தது ஒருநாள் பாதிப்பு… 11,993 பேருக்கு கொரோனா!!

By Narendran S  |  First Published Feb 3, 2022, 9:55 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 11,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 11,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 14,013 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 11,993 ஆக பதிவாகியுள்ளது. 1,30,841 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 11,993 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 11,993 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 2,054 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 1,751 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,751 ஆக அதிகரித்துள்ளது.

Latest Videos

undefined

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3730 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 30 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,666 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 18 பேரும் தனியார் மருத்துவமனையில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 1,66,878 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 23,084 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 31,82,778 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 1,696 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,426 ஆக குறைந்துள்ளது.

அதே போல் செங்கல்பட்டில் 1,198 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,097 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் 1,159 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,017 ஆக குறைந்துள்ளது. ஈரோடு 689, சேலம் 578, கன்னியாகுமரி 463, திருவள்ளூர் 416, நாமக்கல் 337, கிருஷ்ணகிரி 335, காஞ்சிபுரம் 323, திருச்சி 301, தஞ்சை 296, நெல்லை 226, கடலூரில் 210, மதுரை 182, ராணிப்பேட்டை 178, விழுப்புரம் 166, தி.மலை 173, திருவள்ளூர் 149, தருமபுரி 136, நீலகிரி 141, கரூர் 135, திண்டுக்கல் 113, திருப்பத்தூர் 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

click me!