மாடர்னா ஊசிக்கு பெட்டிப் பாம்பாய் அடங்கும் ஒ மைக்ரான்..! ஆய்வில் அதிரடி கண்டுபிடிப்பு

By Raghupati R  |  First Published Dec 21, 2021, 7:35 AM IST

உலக அளவில் பரவி வரும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக மாடர்னா தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வேரியண்டை விட வேகமாக பரவி வருகிறது. இதுவரை  90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது. இந்தியாவில், மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான், 7-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாதிப்பை எட்டியுள்ளது..இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன.

Tap to resize

Latest Videos

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளை இருப்பு வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து ஆலோசனையும் நடத்தி வருகிறது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பூஸ்டர் டோஸ் மக்கள் செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா தடுப்பூசி நிறுவனம், ஒமிக்ரானை தங்கள் நிறுவன தடுப்பூசி கட்டபடுத்துவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ‘மாடர்னா தடுப்பூசி நிறுவனம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2 டோஸ் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டால் ஒமிக்ரானுக்கு எதிரான ஆன்டிபாடிகளை அதிகரிப்பதாக கூறியுள்ளது. 

50 மைக்ரோகிராம் பூஸ்டர் டோஸ் மருந்து, பூஸ்டருக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது 37 மடங்கு ஒமிக்ரானுக்கு எதிரான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடி அளவை அதிகரிப்பதாக கூறியுள்ளது. 100 மைக்ரோகிராம் மருந்தை செலுத்தினால் 83 மடங்கு ஒமிக்ரானுக்கு எதிரான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் அளவை அதிகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

click me!