எது எப்படி இருந்தாலும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எல்லா இடங்களிலும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது ஆகியவை மட்டுமே ஒமைக்ரான் வைரஸ் தொற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
கொரோனா டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் 70 மடங்கு வேகமாக பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் உலகுக்கு தெரிய ஆரம்பித்த சில வாரங்களிலேயே 77 நாடுகளில் பரவி விட்டது. இந்தியாவில் 73 பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் நேற்றுதான் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலமாக 7 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பற்றி ஹாங்காங் பல்கலைக்கழகம் அதிர்ச்சிகரமான தகவலையும் ஆறுதல் அளிக்கும் செய்தியையும் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று பற்றி ஆய்வு நடத்திய ஹாங்காங் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியிருக்கிறது.
இந்த ஆய்வின்படி, டெல்டா வைரஸைவிட ஓமைக்ரான் 70 மடங்கு வேகத்தில் பரவும். ஒமைக்ரான் வைரஸ் ஒரு நபரின் உடலில் இருந்து, மற்றொரு நபரின் உடலுக்கு மிக வேகமாகப் பரவி விடும் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலில் பாதிப்பை ஒமைக்ரான் ஏற்படுத்தாது. ஆனால், இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா, டெல்டா பிளஸ் உருவாற்ற வைரஸ், நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டவையாக இருந்தன. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பலருக்கு, அறிகுறிகள் லேசாகவே தெரிந்தன. எனவே, பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் மருத்துவமனை சென்று சிகிச்சை மேற்கொள்ளும் அவசியம் இருக்காது என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வசதி, அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவையும் தேவைப்படாது என்று ஆறுதல் வார்த்தைகளை ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். இன்றைய சூழலில் கொரோனாவை விட மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஒமைக்ரான் ஏற்படுத்தாது என்பதை மட்டும் இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. ஆனால், ஒமைக்ரான் வைரஸும் உருமாறினால், அது பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எல்லா இடங்களிலும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது ஆகியவை மட்டுமே ஒமைக்ரான் வைரஸ் தொற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.